ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்களை பிரித்தானியாவை தளமாக கொண்ட தொலைக்காட்சி ஒன்று இன்று வெளியிடவுள்ளது.
இந்த தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கத்திற்குள் உள்ள அதிகாரிகள் உடந்தையாக இருந்தமையை பிரித்தானிய ஊடகம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பின்னனியில் அரச புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இருந்ததாக லண்டன் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலி மற்றும் ஐ.எஸ். அமைப்பு இடையே ஒரு சந்திப்பு 2018 இல் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையை சீர்குலைக்கவும் ராஜபக்சர்களை மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு சதித்திட்டம் தீட்டும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறத்தாக பிரித்தானிய ஊடகமான த டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 8 பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காஸ் ஈஸ்டர் போம்பிங்ஸ் டிஸ்பேட்ச்சஸ் என்ற பெயரில் தகவல்கள் வெளியாகவுள்ளன.
பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் செனல் 04 ஊடகம் இதனை வெளியிட தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய நேரப்படி இரவு 11.05 அளவிலும் இலங்கை நேரப்படி அதிகாலை 3.30 அளவிலும் நாளை இந்த தகவல் வெளியாகும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.