சீனா மற்றும் ரஷ்யாவின் தேர்தல் தலையீடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து கனடா விசாரணையை ஆரம்பித்துள்ளது.
2019 மற்றும் 2021 கனேடிய தேர்தல்களில் சீனா தலையிட முயன்றதாக ஊடக அறிக்கைகள் வெளிவந்ததை அடுத்து, கடந்த பல மாதங்களாக ட்ரூடோவின் அரசாங்கம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
கன்சர்வேடிவ் கட்சியின்மைக்கேல் சோங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பெய்ஜிங் மிரட்டல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய மற்றொரு அறிக்கையும் வெளியானது.
இந்த சம்பவம் தொடர்பான பரவலான கண்டனத்தை அடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் டொரண்டோவில் உள்ள சீன தூதர் ஒருவர் வெளியேற்றப்பட்டார்.
இருப்பினும் கனடாவின் உள்விவகாரங்களில் தலையிடவில்லை என தொடர்ந்து மறுத்துள்ள சீனா, குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கியூபெக் நீதிபதி தலைமையில், வெளிநாட்டுத் தலையீடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான பொது விசாரணைக்கு கனடா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பொது விசாரணையை நடத்துவதற்கு கியூபெக் நீதிபதியை அரசாங்கம் நியமிப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் கூறினார்.