இலங்கையில் குற்றமிழைக்கும் படையினரும், அரசியல்வாதிகளும் என்றும் தண்டிக்கப்படுவதில்லை. இந்த செயற்பாடு மாறும் வரையில், ஜனநாயக ரீதியில் இலங்கை செயற்பட போவதில்லை என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆலோசகர் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கறுப்பு ஜுலையின் 40 ஆவது நினைவுதினம் இந்த வருடம் அனுஸ்டிக்கப்பட்டது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 05 வருடங்களை கடந்தும் நீதி கிடைக்காமல் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவை எதற்கும் இலங்கையில் நீதி கிடைக்கவில்லை.
இலங்கை அரசாங்கத்தினால் வாக்குறுதிகள் மாத்திரம் வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரையில் நீதிபொறிமுறைகள் கையாளப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான விடயங்களுக்கு சர்வதேச ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்புகளினால் வலியுறுத்தப்பட்டாலும் இவற்றை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்பது வெளிப்படையாக தெரிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இலங்கையில் அமைதி ஏற்படவேண்டும் என்றால் அங்கு விசாரணைக்குழுக்கள் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்பதுடன் அவர்களின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும் அதற்கான அனைத்துலக உதவிகளும் பெறப்பட வேண்டும் என்றும் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆலோசகர் அலன் கீனன் மேலும் தெரிவித்துள்ளார்.