முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதன் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது
இந்நிலையில் ஐந்தாம்நாளான இன்று (11) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் இதுவரை துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நான்காம் நாள் அகழ்வுப்பணியின் போது விடுதலைப்புலி அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் த.வி.பு.இ-1333 இலக்கத்தகடு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய போதிலும் அகழ்வாய்வுகள் தொடர்பில் அன்றையதினம் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக இருந்த யாழ் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
@athavannews ஐந்தாம் நாளாக தொடரும் மனித புதைகுழி அகழ்வு! #NEWS#Humanburial#UPDATS