கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டெனிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் உலகின் 10 ஆம் நிலை வீராங்கனையான கோகோ காஃப் வெற்றிபெற்றுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற போட்டியில் பெலரஷ்ய வீராங்கனையான அரினா சபலெங்காவை எதிர்கொண்ட அவர் 2-6 6-3 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி மகுடம் சூடினார்.
இந்த வெற்றியானது 19 வயதான அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் பெற்றுக்கொள்ளும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்
அத்தோடு 23 முறை சம்பியனான செரீனா வில்லியம்ஸ் 1999 இல் பட்டத்தை வென்ற பின்னர் யுஎஸ் ஓபனை வென்ற முதல் அமெரிக்க இளம்பெண் இவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.