நியூயோர்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி 24வது கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்று நோவக் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டெனிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி ஒரு மணி நேரம் மற்றும் 44 நிமிடங்கள் நீடித்தது.
இதில் ரஷ்ய டென்னிஸ் சம்பியனான டேனியல் மெட்வெடேவை எதிர்கொண்ட நோவக் ஜோகோவிச் 6-3, 7-6 மற்றும் 6-3 என்ற செட்டில் வெற்றிபெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பறினார்.
இதுவரை அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற மார்கரெட் கோர்ட்டின் 50 ஆண்டுகால சாதனையை சாதனையை நோவக் ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் மட்டும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடியுள்ள நோவக் ஜோகோவிச் மூன்று பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.