உக்ரேன் தானியங்கள் இறக்குமதி மீதான தடையை தாம் நீக்கப்போவதில்லை என்றும் அவ்வாறு நீக்குவதானது தமது நாட்டின் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் போலந்து பிரதமர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கையில் இருந்து உக்ரேனிய உற்பத்திகளுக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் 15 வரை போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.
விவசாயிகளின் எதிர்ப்புக்குப் பிறகு, உக்ரேனிய விவசாயப் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு போலந்து அமைச்சர்கள் உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.