கடுமையான வெள்ளத்தால் பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்திய லிபியாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ஈரானின் வெளிவிவகார அமைச்சர் முன்வைத்துள்ளார்.
ஈரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டி லிபியாவிற்கு நிவாரணம் வழங்க தயாராக இருப்பதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
பேரழிவு குறித்து வருத்தம் தெரிவித்த அவர், லிபிய அதிகாரிகள், மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.