ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னும் எதிர்வரும் நாட்களில் சந்திப்பார்கள் என கிரெம்ளின் அறிவித்துள்ளது.
இருப்பினும் இவர்களுக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் செய்தி மாநாடு எதுவும் இடம்பெறாது என்றும் கிரெம்ளின் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த சந்திப்பின் போது ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரும் பங்கேற்பார் என்று இன்டர்ஃபக்ஸ் தெரிவித்துள்ளது.