கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் இன்று 9 ஆவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணியோடு சேர்த்து இதுவரை 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் எட்டாவது நாள் அகழ்வாய்வுகள் நேற்று இடம்பெற்ற நிலையில், ஐந்து மனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், துப்பாக்கிச் சன்னம் ஒன்றும், அத்தோடு அவர்களுடைய நீளக்காற்சட்டையில் இ-1124 இலக்கமும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டன.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தவாரம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதுவரை நடைபெற்ற அகழ்வாய்வு பணிகளில் 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நேற்றுமட்டும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குரிய அடையாள இலக்கம் பொறிக்கப்பட்ட ஆடையொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
















