ஈரான் மீது அணு ஆயுத தடைகளை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளன.
பிரித்தானிய, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை விற்பதை தடுக்கும் முயற்சியில் ஈரான் மீதான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
2015 ஆம் ஆண்டில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட நிலையில் அந்த விதிமுறைகளின் கீழ், சில தடைகள் அடுத்த மாதம் நீக்கப்படும்.
ஆனால் யுரேனியத்தை செறிவூட்டி சேமித்து வைத்ததன் மூலம் ஈரான் ஒப்பந்தத்தை மீறியதாக ஐரோப்பிய நாடுகள் குற்றம் சுமத்தி வருகிற நிலையில் இது ஆத்திரமூட்டல் நடவடிக்கை என ஈரான் தெரிவித்துள்ளது.
இருப்பினும் காலாவதியாகும் ஐ.நா.வின் தடைகளை தங்கள் சொந்த சட்டங்களில் இணைத்துக்கொள்வதாக பிரித்தானிய, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
எவ்வாறாயினும் தடைகளுக்கு மத்தியிலும் ஈரானில் தயாரிக்கப்பட்ட பல ட்ரோன்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவால் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.