ஸ்பெயினின் மகளிர் கால்பந்து வீராங்கனைகள் தங்களது குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டிய பின்னர் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை காரணமாக கடந்த வார இறுதியில் ஸ்பெயினின் பெண்கள் கால்பந்து லீக் முதல் சுற்று போட்டிகளில் வீராங்கனைகள் விளையாடவில்லை.
கடந்த சீசனில், லீக்கில் ஆண்களுக்கு வழங்கப்பட்ட 182,000 யூரோக்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் இப்போது வரை 16,000 யூரோக்களே வழங்கப்படுகின்றன.
புதிய ஒப்பந்தத்தின் படி பெண்கள் லீக்கின் குறைந்தபட்ச ஊதியத்தை இந்த சீசனில் 21,000 யூரோவாக அதிகரிக்கவும் அந்தத் தொகையை 2025 க்குள் 23,500 யூரோவாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.