பிரித்தானியாவைச் சேர்ந்த மார்க் ஓவன் எவன்ஸ் என்பவர் தனது மகளான லூசி மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டும் வகையில் மகளின் பெயரை 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
49 வயதான மார்க், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முறையாக பச்சை குத்துவதில் உலக சாதனை படைத்தார். பின்னர் அவர் தனது முதுகில் மகள் லூசியின் பெயரை 267 முறை பச்சை குத்திக்கொண்டார். ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு அச்சாதனையை டீட்ரா என்ற அமெரிக்க பெண் தனது பெயரை 300 முறை பச்சை குத்திக்கொண்டதன் மூலம் முறியடித்தார்.
இதனை அறிந்த எவன்ஸ், டீட்ராவின் சாதனையை முறியடிக்க விரும்பினார். இதனையடுத்து தனது மகளின் பெயரை 2 தொடைகளிலும் 400 முறைகள் பச்சை குத்தியுள்ளார்.