புதிய ரிமோட் சென்சிங்(தொலை உணர்வு) செயற்கைக்கோளான யோகன் 39-யை நேற்யை தினம் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் மார்ச்-2D கேரியர் ரொக்கெட் மூலம் அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12:13 க்கு குறித்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது எனவும், அது நிலம் மற்றும் கடலில் உள்ள பொருட்களை கண்காணித்தல், ஆய்வு செய்தல் மற்றும் அளவிடுதல், அத்துடன் வானிலை முன்னறிவிப்பைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.