ஆதித்யா எல்-1 விண்கலம் தனது ஆய்வுப் பணியை இன்று ஆரம்பித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது.
இந்த விண்கலம், பி.எஸ.;எல்.வி சி-57 ரொக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 02 ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இதுவரையில் 4 முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது..
இந்த நிலையில், அதற்கு அடுத்தகட்டமாக ஆதித்யா விண்கலம் நாளை புவிவட்டப் பாதையில் இருந்து விலக்கப்பட்டு சூரியனை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கவுள்ளது.