இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான செயலமர்வொன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் வட கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கான மேலதிகசெயலாலர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
சுற்றுலாத்துறை மற்றும் சிவில் விமானத்துறை என்பன இன்றைய காலகட்டத்தில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் மாணவர்கள் மத்தியியில் அது தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கும் நோக்கிலேயே இச்செயற்திட்டம்முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் வட கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களுக்கான மேலதிக செயலாலர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
















