ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சாரதிகள் தமது வாகனங்களில் ஜனாதிபதி செயலக பெயர் பலகையை காட்சிப்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதில் செயலாளரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், இவ்வாறான பெயர் பலகைகளை காட்சிப்படுத்துகின்ற எந்தவொரு வாகனமும் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடையவை அல்ல எனவும் ஜனாதிபதியின் பதில் செயலாளர் கூறியுள்ளார்.
அத்தோடு அவ்வாறு பெயர் பலகையை காட்சிப்படுத்தும் வாகனங்கள் பொதுமக்களை ஏமாற்ற மேற்கொள்ளப்படும் ஆள்மாறாட்ட முயற்சி எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.