மகளீருக்கு 33சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமூலம் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 18ஆம் திகதி ஒப்புதல் அளித்த நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் குறித்த சட்டமூலத்தை தாக்கல் செய்தார்.
புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் சட்டமூலமாக மகளிர் இடஒதுக்கீடு சட்டமூலம் அமைந்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று மகளிர் இடஒதுக்கீடு சட்டமூலம் தொடர்பான விவாதம் மக்களவையில் இடம்பெற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதற்கு ஆதரவாக 454 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன.