ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்றைய தினம் ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யித் இப்ராஹிம் ரைசியைச் (Seyyed Ebrahim Raisi) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின்போது இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான நீண்ட கால உறவுகள் மற்றும் பல வருடங்களாக ஒருவருக்கு ஒருவர் வழங்கிய ஒத்துழைப்புக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவு கூர்ந்தார்.
மேலும், இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த காலப்பகுதியில் ஈரான் வழங்கிய ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
இதேவேளை புதிய பிரவேசத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த ஈரான் ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்ளும் முகமாக கூட்டு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஈரானிடத்திலுள்ள அதி நவீன விவசாய தொழில்நுட்பத் தெரிவுகளை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
இந்தச் சந்திப்பின்போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் உள்ளிட்டவர்கள் இலங்கை சார்பில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.