முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காலி நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவுஇன்று வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சொகுசு வாகனம் ஒன்றை சட்டவிரோதமான முறையில் மாற்றியமைத்த சம்பவம் தொடர்பில் நிஷாந்த முத்துஹெட்டிகமகே கைது செய்யப்பட்டார்.