இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள மலேசிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி நேற்றைய தினம் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்மைச் (Anwar Ibrahim) சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது அடுத்த வருடத்தின் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதமளவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மலேசியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் பிரதமர் அழைப்பு விடுத்தார். இதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள மலேசிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்த பிரதமர்இ இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை கைசாத்திடுவது தொடர்பாக சாதகமான பதில் வழங்கிய மலேசிய பிரதமர், அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவிருக்கும் IORA மாநாட்டில் மலேசிய வெளிவிவகார அமைச்சரின் பங்கேற்பையும் உறுதிப்படுத்தினார்.
மேலும் வலயத்தின் பரந்த பொருளாதார பங்காளித்துவமான (RCEP) இல் இணைந்துகொள்ள இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மலேசிய பிரதமர் உறுதியளித்தார்.