ரஷ்யாவின் படையெடுப்பில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் பாகங்களை விநியோகித்ததற்காக ஐந்து ரஷ்ய மற்றும் 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசாங்கம் புதிய தடைகளை விதித்துள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது மற்றும் ஏற்றுமதி செய்வதை கடினமாக்கும் வகையில் இந்த தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் ஒன்பது நிறுவனங்கள் ஏற்கனவே மே மாதத்தில் அமெரிக்கா விதித்த தடையை எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.