2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்கு ஜூலை 31ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதன்படி, சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட 2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.
சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும்அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.