உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றில் காதுகேளாத பெண் வழக்கறிஞர் ஒருவர் சைகைமொழியில் வாதிட்ட சம்பவம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சாரா சன்னி என்ற வழக்கறிஞரே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அனுமதியைப் பெற்று இவ்வாறு மொழிபெயர்ப்பாளர் ஒருவரது உதவியுடன் வாதாடியுள்ளார்.
அத்துடன் ”நீதிமன்ற வழக்காடல்களில் உரத்த குரலில் வாதிட வேண்டிய அவசியம் இல்லை” என்பதையும் அவர் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதே வேளை மொழிபெயர்ப்பாளரின் வேகத்தையும் தலைமை நீதிபதி பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.