அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சுமார் 13 அடி நீளமான முதலை ஒன்றின் வாயில் சிக்கிய பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பின்னெலஸ் கவுன்டி என்னும் இடத்தில் உள்ள கால்வாய்க்குள் இருந்த இராட்சத முதலை ஒன்று பெண் ஒருவரை தனது தாடையில் வைத்திருப்பதைக் கண்ட பொதுமக்கள் இது குறித்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளர்.
இதைத்தொடர்ந்து அங்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் பொலிஸார் குறித்த முதலையை கருணை அடிப்படையில் கொன்று பின்னர் பெண்ணின் உடலை மீட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் முதலையில் வாயில் இருந்து அப்பெண்ணை மீட்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
(மூலம்-The Times and The Sunday Times)