“இந்திய மீனவர்களைக் கைது செய்யும் செயற்பாட்டில் இலங்கை கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர்” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் இன்று இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டினை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் செயற்பாட்டில் இலங்கை கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர். நான் இவ்விடயம் தொடர்பில் ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கின்றேன். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தியா சென்று இவ் விடயம் தொடர்பில் தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடவுள்ளேன். அதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் எனவும் நம்புகின்றேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.