அவுஸ்ரேலியாவின் உலகக் கிண்ண அணியில் காயம் அடைந்த அஷ்டன் ஆகருக்குப் பதிலாக மார்னஸ் லபுசாக்னே அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
உலகக் கிண்ண தொடருக்கான அவுஸ்ரேலியாயின் 15 பேர் கொண்ட அணியில் இடமபெற்றிருந்த அஷ்டன் ஆகர் காயம் அடைந்த நிலையில் பதிலாக மார்னஸ் லபுசாக்னே அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி பெயரிடப்பட்ட அணியில் இரண்டு முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் பின்காலில் ஏற்பட்ட காயம் மற்றும் குழந்தை பிறந்ததற்காக வீடு திரும்பிய அவர் இந்தியாவில் நடந்த தொடரையும் தவறவிட்டார்.
இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்காக அணிக்குள் உள்வாங்கப்பட மார்னஸ் லபுசாக்னே ஐந்து போட்டிகளில் 70.75 சராசரியோடு 283 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்ரேலிய அணையில் மிட்செல் மார்ஷ், டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே, டிராவிஸ் ஹெட், கமரூன் கிரீன், சீன் அபோட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், அடம் சாம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆறாவது ஒருநாள் உலகக் கிண்ணத்தை வெல்லும் முயற்சியில் ஒக்டோபர் 8 ஆம் திகதி சென்னையில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவுஸ்ரேலியா அணி விளையாடவுள்ளது.