உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்யாவின் மின்நிலையமொன்றினை இலக்கு வைத்து உக்ரேன் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலினால் ரஷ்ய பிராந்தியங்களான Belgorod, Kursk மற்றும் Kaluga பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் ரஸ்யாவின் பெல்கொரோட் பகுதியில் உக்ரேனின் இரண்டு ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இந்த வாரம் இறுதியில் ரஷ்யா மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும் என உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக உக்ரேனிய நடவடிக்கைகள் அதிகரிக்கும் எனவும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்படும் வரை உக்ரேன் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.