நாட்டில் நீதித்துறை நேர்மையான முறையி;ல் செயற்படுகின்றதா என்ற கேள்வியெழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த அவர், முறையான தீர்ப்பை வழங்கிய நீதிபதி அச்சுறுத்தப்பட்டதை வண்மையாக கண்டிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதித்துறை என்பது நியாயமான வகையில் செயல்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது எனவும் ஆனால் தற்போது தமிழ் நீதிபதிகளுக்கு நியாயமாக செயற்பட முடியாத நிலையேற்பட்டுள்ளதுடன்; அவர்களை அச்சுறுத்துகின்ற செயற்பாடுகளும் நாட்டில் இடம்பெறுவதாக விசனம் தெரிவித்துள்ளார்.
எனவே,நீதியமைச்சர் இந்த விடயத்தை ஆராய வேண்டும் எனவும், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் இராஜீனாமாவில் அழுத்தம் உயிர் அச்சுறுத்தல் இருக்குமாக இருந்தால் நீதி அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.