பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் தமிழில் அசைக்க முடியாத வானொலியாக திகழும் ஆதவன் வானொலி இன்று தனது 8 ஆவது ஆண்டில் கால்பதிக்கின்றது.
முதன்முதலாக டப் (DAB) மூலம் தனது சேவையை ஆரம்பித்த ஆதவன் வானொலி பின்னர் இணையம் ஊடாக தமிழ் மக்களின் மனதை கவர்ந்து புதுமையான நிகழ்ச்சிகளுடனும் உடனுக்குடனான செய்திகளுடனும் தொடர்ந்தும் பயணித்து வருகின்றது.
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் தமிழில் அசைக்க முடியாத வானொலியாகத் திகழும் ஆதவன் வானொலி, இன்று தனது 7 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.
லைகா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான Dr. அல்லிராஜா சுபாஸ்கரன் தலைமையிலான ஆதவன் ஊடக வலையமைப்பின் முக்கிய ஊடகமாக திகழும், ஆதவன் வானொலியின் 7 ஆவது ஆண்டு விழா இன்றாகும்.
இதனை முன்னிட்டு, இன்று ஆதவன் வானொலியின் கொழும்பு அலுவலகத்தில் சிறப்பு நிகழ்வுகளும், விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
இதில், ஆதவன் வானொலியின் ஊழியர்கள், ஆதவன் தொலைக்காட்சியின் ஊழியர்கள், ஆதவன் இணைய ஊழியர்கள் மற்றும் தமிழ் எப்.எம் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
டவ் மூலம் (DAV) முதன்முதலாக தனது சேவையை ஆரம்பித்த வானொலி என்ற அந்தஸ்த்தை பெற்ற ஆதவன் வானொலி, தற்போது இணையம் ஊடாக தனது சேவையை விரிவாக்கியுள்ளது.
புதுமையான நிகழ்ச்சிகளையும் உடனுக்குடனான உள்நாட்டு மற்றும் உலகச் செய்திகளையும் நேயர்களுக்காக தொடர்ந்து வழங்கி வரும் ஆதவன் வானொலி, பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் தமிழில் அசைக்க முடியாத வானொலியாக திகழ்ந்து வருகின்றது.