தனது குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்ட போதிய அளவு பால் சுரக்கவில்லை என்ற மன விரக்தியில் தாயொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவரே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகக் குழந்தை பேறு இல்லாமல் இருந்துள்ள நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் அவருக்கு குழந்தை பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.