நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் இந்தியாவின் பெரும் பகுதிகளில் உணரப்பட்டதாகவும் இரண்டு நடுக்கங்களும் அரை மணி நேர இடைவெளியில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேபாளம் மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் இதனால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலும் கிடையாது எனவும் தேசிய நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது














