விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக சிதத் வெத்தமுனி தலைமையிலான குழுவொன்றை நியமித்து அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை அமைச்சர் வெளியிட்டிருந்தார்.
இலங்கை கிரிக்கெட் சபை சமர்ப்பித்த ரிட் மனுவை பரிசீலித்த நீதியரசர்கள் அடங்கிய அமர்வு இன்று புதன்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.