தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” அண்மைக் காலமாகப் பெய்துவரும் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ளன.
இதனால், பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதோடு சுவாசம் சம்பந்தமான நோய்களும் ஏற்பட்டு வருகின்றன.
அத்துடன் சிறுவர்களின் உடல் பருமன் மேலும் அதிகரித்து வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் சுத்தமான நீர் மற்றும் உணவினை எடுத்துக்கொள்வது அவசியம். இதன்மூலம் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும்”இவ்வாறு தெரிவித்துள்ளார்.