காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும்; 9ஆம் திகதி புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த கூட்டத்தில், பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் என மொத்தம் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அடுத்த வருடம் இடம்பெறவுள்ள மக்களவை தேர்தல் குறித்தும்,I.N.D.I.Aகூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்தும் இதன்போது ஆலோசிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து I.N.D.I.A. என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது,