பாடசாலையில் மின் விசிறி மோதியதில் மாணவனொருவன் உயிரிழந்த சம்பவம் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
14 வயதான குறித்த மாணவன் வகுப்பறையில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, நாற்காலியின் உதவியுடன் மேசையின் மீது ஏறியுள்ளார் எனவும் இதன்போது எதிர்பாராத விதமாக மின்விசிறியில் மோதியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படுகாயமடைந்த மாணவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.