உக்ரேனிய பிரதேசத்தை குறிவைத்து சமீபத்தில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு ஒடேசா மற்றும் மைகோலைவ் பகுதிகளிலும், மத்திய கிரோஹோவ்ராட் பகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஒரே இரவில் ஏவப்பட்ட 29 ரஷ்ய ஆளில்லா விமானங்களில் 24 ஐ சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் உக்ரேனிய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும் கிரோஹோவ்ராட்டில் குறிப்பிடப்படாத உள்கட்டமைப்பு வசதி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.