நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக, 12 மாவட்டங்களைச் சேர்ந்த 48,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை மழையுடனான கால நிலை, எதிர்வரும் நாட்களுக்கும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனவே பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.