அமைச்சுகளின் புதிய செயலாளர் மற்றும் தூதுவர்கள் ஏழு பேரை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உயர் பதவிகளுக்கான குழு கூடிய போது இந்த நியமனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் குஷானி ரோஹணதீர அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உயர் பதவிகளுக்கான குழு பின்வரும் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
எகிப்துக்கான இலங்கையின் தூதுவராக M.E.M. Weninger வும் பங்களாதேஸின் இலங்கைக்கான தூதுவராக W. M Dharmapala வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக H. M.B.P Herath வும் இலங்கைக்கான விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் பிரைவேட் லிமிடெட்யின் தலைவராக ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் G. A. Chandrasiri நியமிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை பயோ-டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட் லிமிடெட்டின் தலைவராக S. W. M. Hettige வும் இலங்கை பத்திரிக்கையாளர் சபையின் தலைவராக B.M.L Pathirana வும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக I. S. Wijesekara வும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.