சிரியாவில் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள இராணுவக் கல்லூரி மீது நேற்றைய தினம் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதே வேளை குறித்த தாக்குதலில் 240 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், அவர்களில் பலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இராணுவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின்போதே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் ,அந்நாட்டு அரசு ” சர்வதேச சக்திகளால் ஆதரிக்கப்பட்ட போராளிகள்” தான் இத்தாக்குதல் நடத்தியிருப்பார்கள்” எனக் குற்றம் சாட்டியுள்ளது.
இதே வேளை இன்று(06) முதல் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
(வீடியோ மூலம்- Oneindia News)