கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியில் இன்று காலை 100 வருடங்கள் பழமை வாய்ந்த ரொபரோஸியா வகையான மரம் ஒன்றே பேருந்தில் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ரானி ஜயவர்தன இதனைத் தெரிவித்தார். எனினும், இந்த மரத்தை அகற்ற வேண்டும் என எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்
இந்த மரங்கள் மேலும் சில பகுதிகளில் உள்ளன, குறித்த மரங்களின் தன்மை தொடர்பில், ஆராய்ந்து அதனை அகற்றுவது தொடர்பில், எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின ஏனைய பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும