இன்று (09) அதிகாலையில் மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரை மிளகாய்ப் பொடியால் தாக்கி அவரிடம் இருந்து சுமார் 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தகர் இன்று காலை வர்த்தக இடத்தை மூடிவிட்டு தனது முச்சக்கர வண்டியில் மற்றுமொரு ஊழியரை அழைத்துக்கொண்டு மீகொட தம்ம மாவத்தை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் மெகொட சிறிரத்தன மாவத்தையில், முச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் மிளகாய்ப் பொடியை வர்த்தகர் முகத்தில் தூவிவிட்டு அவரிடமிருந்த பணப் பொதியுடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














