புழல் சிறையில், சிறைவாசம் அனுபவித்துவரும் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று காலை ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமுலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, நீதிமன்றத்தினால் பிணை மறுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.