கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தானின் ஹெராட் பகுதியின் வடமேற்கே 40 கிலோமீற்றர் தொலைவில் 6.3 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதன் பின்னர் தொடர்ச்சியாக பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கங்களால் தற்போதுவரை 2,445 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர் எனவும் 1,200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1,320 வீடுகளும் 135 கட்டிடங்கள் முழுமையாக தரைமட்டமாக்கியுள்ளதுடன் 500 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.