பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் தற்போதுள்ள மேம்பாலத்தை ஐந்து மாதங்களுக்குள் அகற்றி புதிய பாலத்தை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
நிரந்தர பாலம் அமைக்கப்படும் வரை 10 நாட்களுக்குள் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் தற்காலிக வீதியை அமைக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் அரச பொறியியல் கூட்டுத்தாபனம இந்த செயல்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு செல்லும் மேம்பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளையடுத்து ஜனாதிபதியால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.