ஜெனிவா சென்றிருந்த தமது கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய கூட்டங்களில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய விவகாரம் தொடர்பாக இந்த அமர்வில் பேசுவதற்கு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹெக்டர் அப்புஹாமி திட்டமிட்டிருந்ததாக நளின் பண்டார குறிபிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அதற்கான சந்தர்ப்பம் ஹெக்டர் அப்புஹாமிக்கு வழங்கப்படவில்லை என நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.