சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டம் இன்று இரண்டாவது நாளாக மொரோக்கோவின் மராகேஷில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளது.
இந்த குழு இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது தவணை குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தும் என நீதி அமைச்சர்விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டின் வரிக் கொள்கை மற்றும் பிற பொருளாதாரக் காரணிகள் குறித்து இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.