2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த கிளாடியா கோல்டினுக்கு(Claudia Goldin) அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்காகவும், பாலின இடைவெளியின் முக்கிய ஆதாரங்களை ஆய்வில் வெளிப்படுத்தியமைக்காகவும் கிளாடியா கோல்டினுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கிளாடியா கோல்டி கடந்த பல ஆண்டுகளாக பொருளாதார நிபுணராக செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.