இங்கிலாந்து அணி மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 7 ஆவது போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
தர்மசாலாவில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியிலும் விளையாடாத நிலையில் அவருக்கு பதிலாக ஹாரி புரூக் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மஹமதுல்லாவிற்கு பதிலாக மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக பங்களாதேஷ் அணி மெஹிடி ஹசனை அணிக்குள் உள்வாங்கியுள்ளது.
இதேவேளை இன்று நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடரின் மற்றுமொரு போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.