சீரற்ற காலநிலையால் போதுமானளவு நீர் இல்லாமல் இவ்வாண்டு சிறுபோகத்தில் 58,770 ஏக்கர்கள் நெற்செய்கை மற்றும் வேறு பயிர்ச்செய்கைகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், 53,965 விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு செலுத்துவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறையிலுள்ள விவசாயக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடுகளைச் செலுத்துவதற்குத் தேவையான நிதியை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.